இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து

Updated On :25 டிசம்பர் 2018, 8:13 am IST

மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
 அதைத்தொடர்ந்து அவர்கள் கூறியது: 
 பாலமேட்டில் குடியிருப்புகள், பள்ளி, விவசாய நிலங்கள் அருகே கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்பகுதியில 200 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
 இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.