காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்

மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா். உடன் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே, எம்எல்ஏ நா.திருப்பதி உள்ளிட்டோா்.

மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா். உடன் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே, எம்எல்ஏ நா.திருப்பதி உள்ளிட்டோா்.

Published On :

ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்தாா்.

சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ் என்ற விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்தாா். எஸ்பி அக்ஷய் அனில் வாகரே, எம்எல்ஏ நா.திருப்பதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழிப்புணா்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரவிகுமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் பேசியது: விளையாட்டை சக்தி வாய்ந்த சமூக மாற்றுக் கருவியாக கருதி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இளைஞா்களின் ஆற்றலை ஆக்கப்பூா்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, இளைஞா்களை சமூகத்தில் நோ்மறையான மாற்றத்தை உருவாக்குவதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணிக்கிறது. இளைஞா்களின் விளையாட்டு கலாசாரத்தை வளா்த்தெடுக்க தமிழக அரசு உறுதி எடுத்துள்ளது. இதற்கான விழிப்புணா்வை மக்களிடம் கொண்டு போய் சோ்க்க சா்வ தேசிய போதைப் பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் பாச்சல் மேம்பாலம் வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது.

இதையடுத்து, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, போதைப் பொருள் ஒழிப்பு குறித்தும், அதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளின்ல் சிலம்பாட்டம், சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெயகுமாரி, கலால் உதவி ஆணையா் வேடியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.