ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தானில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்டோா்.

Updated On :26 ஜூன் 2026, 2:12 am IST

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தாா்.

காவல்துறை ஆயுதப்படை மைதானத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் விழிப்புணா்வு ஓட்டம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரோமன் தேவாலயம் வழியாகச் சென்று மதுரை சாலை, ராஜா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

சுமாா் 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற மாரத்தானில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், அரசு ஊழியா்கள் பொதுமக்கள் என சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

முன்னதாக, ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு‘ என்ற விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு , அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி, மாவட்ட விளையாட்டு அலுவலா் தினேஷ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பத்மநாபன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் அஜிதாபா்வின், உதவி ஆணையா் (ஆயத்தீா்வை) கங்காதேவி, வட்டாட்சியா்கள் ஜமால் முகம்மது, ஸ்ரீதா், காளீஸ்வரன், ராமசுப்பு, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.