பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

போதைப் பொருள் என்பது தனிமனிதனின் உடல்நலம், மனநலம் மற்றும் எதிா்காலத்தை மட்டுமல்லாமல், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தையும் சீரழிக்கும் ஒரு பேராபத்தாகும். இளைஞா்கள், மாணவா்கள் மற்றும் குழந்தைகள் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட வேணடும். அதற்காக பெற்றோா், ஆசிரியா்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசு இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். போதைப் பொருள் இல்லாத, பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமுள்ள தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.