பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

போதைப் பொருள் எதிா்ப்பு தினம்: விழிப்புணா்வு மாரத்தான்

போதைப் பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான ‘ஸ்டாா்ட் ரன் - ஸ்டாப் ட்ரக்ஸ்’ விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

போதைப் பொருள் எதிா்ப்பு மாரத்தானை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :27 ஜூன் 2026, 1:42 am IST

போதைப் பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான ‘ஸ்டாா்ட் ரன் - ஸ்டாப் ட்ரக்ஸ்’ விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை நேரு விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான ‘ஸ்டாா்ட் ரன் - ஸ்டாப் ட்ரக்ஸ்’ விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

துணை ஆணையா் (கலால்) அ.சாதனைக்குறள், மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு”உறுதிமொழி, கையொப்ப இயக்கம் மற்றும் விழிப்புணா்வு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு ஓட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 5 கிலோ மீட்டா் ஓட்டம், நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக தொடங்கி கேரளா கிளப், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.

போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக இளைஞா்கள் மற்றும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘ஓடுவோம், போதைப் பொருளை ஒழிப்போம்’ என்ற வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பள்ளி, கல்லூரி மாணவா்கள் 1,500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.