மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சட்டப் பேரவை கூட்டங்களில்  பங்கேற்பது கட்டாயம்: காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணை முதல்வர் கடிதம்

கர்நாடக சட்டப் பேரவை கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.

Updated On :9 ஜூலை 2018, 2:59 am

கர்நாடக சட்டப் பேரவை கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுதொடர்பான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ்-  மஜத கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.  துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடக்கிறது.
இந்த நிலையில்,  சில அமைச்சர்கள் அவைக்கு வருகைதராமல் இருப்பது குறித்து பேரவை,  மேலவைத்தலைவர்கள் வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 
அவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் தீவிரமாகப் பங்காற்றி, , செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரும்புகிறது.
அவையில் உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் விவகாரங்கள்,  தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள்,  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முழுமையானபதில்களை வழங்க வேண்டும்.  மேலும் பேரவை,  மேலவையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தால், கண்டிப்பாக கலந்துகொண்டு அவையின் விவாதத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும். 
இதற்காக அவையில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்  என்று பரமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.