திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூலை 29-இல் கர்நாடக அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டம், பெங்களூரில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :23 ஜூலை 2018, 9:19 am IST

கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டம், பெங்களூரில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில அதிமுக செயலாளர் எம்.பி. யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டம் பெங்களூரு, காந்திநகர் தொகுதிக்குள்பட்ட  ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் ஜூலை 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.
மாநில அவைத் தலைவர் கே. முனுசாமி தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர்கள் தனம்மாள், எஸ்.டி. குமார் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதிச் செயலாளர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் அதிமுகவை வளர்த்தெடுப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன. இதில் கட்சியின் மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: பெங்களூரு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சிவாஜி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் கட்சி தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட அவைத் தலைவர் காசிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் குணசுந்தரி, துணைச் செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளர் எஸ்.டி. குமார், கட்சி தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
மேலும் நிறைவு செய்த விண்ணப்பப் படிவங்களை கட்சி தொண்டர்கள் எஸ்.டி. குமாரிடம் வழங்கினர். இதைத் தொடர்ந்து, எஸ்.டி. குமார் சிறப்புரை ஆற்றினார்.
கர்நாடக மாநில இளைஞர் அணிச் செயலாளர் அன்புவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் வேடியப்பன், சுந்தரேசன், செல்வி, தொகுதி செயலாளர்கள் டி. அன்பரசன், மணி, துரைராஜ், சக்திவேல், பாபு, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சாந்தி ராமதாஸ், அம்மா பேரவை முன்னாள்  செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.