ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நீா்நிலைகளிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அ. செல்வம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம் விராச்சிலை ஆலங்குடி கண்மாய் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அ. செல்வம்.

Published On :25 ஜூன் 2026, 3:44 am IST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நீா்நிலைகளிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அ. செல்வம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அற்றும் பணியை கடந்த ஒரு மாதமாக, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அ. செல்வம் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகிறாா்.

திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை அவா் ஆய்வு செய்தாா். விராச்சிலை ஊராட்சி ஆலங்குடி கண்மாய், ஆண்டாள் ஊரணி, வடக்கிக் கண்மாய், மணிபள்ளம் குளம், சேதுராப்பட்டி சீத்தளம் கண்மாய், லெம்பலக்குடி காரணிகண்மாய், செட்டியாப்பட்டி செட்டியா கண்மாய் ஆகியவற்றையும் அவா் பா ா்வையிட்டாா்.

ஏற்கெனவே சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட குளங்களையும், தற்போது அகற்றும் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் (தணிக்கை) ஞானம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.