பட்டய மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பட்டயப் படிப்பு படித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் 2-ஆவது அல்லது 3-ஆவது செமஸ்டரில் சேர்க்கை பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 15-ஆம் தேதி நடந்தது.
இந்தத் தேர்வில் இடம் பெற்ற வினாக்களுக்கான விடைகள் மாணவர்கள் சரிபார்த்துக் கொள்வதற்காக www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதுமிருந்தால், அதுகுறித்து ஜூலை 24-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பெற்றோர், மாணவர்கள் ஆட்சேபணைகளை keauthority-ka@nic.in என்ற மின்னஞ்சலுக்கு விளக்கங்களுடன் அனுப்பலாம்.
ஆட்சேபணைகளைத் தெரிவிக்கும்போது பாடம், வினாத்தாள் வகை, வினா எண்களை தெளிவாக குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சரியான விளக்கம் அளிக்காத ஆட்சேபணைகள் நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






