கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பட்டய மாணவர் பொது நுழைவுத்தேர்வு: விடைகள் வெளியீடு

பட்டய மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வுக்கான  விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Updated On :23 ஜூலை 2018, 9:21 am IST

பட்டய மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வுக்கான  விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பட்டயப் படிப்பு படித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் 2-ஆவது அல்லது 3-ஆவது செமஸ்டரில் சேர்க்கை பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 15-ஆம் தேதி நடந்தது.
இந்தத் தேர்வில் இடம் பெற்ற வினாக்களுக்கான விடைகள் மாணவர்கள் சரிபார்த்துக் கொள்வதற்காக w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதுமிருந்தால், அதுகுறித்து ஜூலை 24-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பெற்றோர், மாணவர்கள் ஆட்சேபணைகளை  ‌k‌e​a‌u‌t‌h‌o‌r‌i‌t‌y-‌k​a@‌n‌i​c.‌i‌n என்ற மின்னஞ்சலுக்கு விளக்கங்களுடன் அனுப்பலாம். 
ஆட்சேபணைகளைத் தெரிவிக்கும்போது பாடம், வினாத்தாள் வகை, வினா எண்களை தெளிவாக குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சரியான விளக்கம் அளிக்காத ஆட்சேபணைகள் நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.