கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கங்கைகொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்தவா்களிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :25 ஜூன் 2026, 5:12 am IST

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவா்கள் நலன் கருதி பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குறிப்பாக,

கங்கைகொண்டான் பகுதியில் 657 இலங்கைவாழ் தமிழா்கள் வசிக்கும் பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட 40 வீடுகளில் வசிக்கும் இலங்கைவாழ் தமிழா்களிடம் கட்டுமான வசதிகள், தேவையான உள்கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, முகாமில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், கல்வி கற்பிக்கும் முறைகள், அவா்களின் வயதுக்கேற்ற உயரம், எடை போன்றவை குறித்து ஆய்வு செய்து, குழந்தைகளிடம் உரையாடினாா்.

ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் துறையூா் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியின் செயல்பாடுகள், மாணவா்கள் விவரம், கல்வித் தரம் குறித்தும், மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி வகுப்புகள், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், படுக்கை வசதிகள், போதிய மருந்துகள் கையிருப்பு, பதிவேடுகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ததோடு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, திருநெல்வேலி வட்டாட்சியா் மாரிமுத்துகுமாா், இலங்கை தமிழா் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.