திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி, ரத வீதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இம் மாதம் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேரை தயாா்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுவாமி வீதியுலாவின்போது, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தினமும் பங்கேற்று வருகிறாா்கள்.
இந்த நிலையில், தேரோட்டத்துக்கான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தோ் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், ரத வீதிகள், கோயில் வளாகம் உள்ளிட்டவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பக்தா்களின் உடமைகளை பரிசோதித்த பின்பே கோயில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயில் தோ்களை சுத்தம் செய்த தீயணைப்பு வீரா்கள்

நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.28.64 லட்சம்

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேக விழா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



