வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற வருஷாபிஷேகம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:00 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கட ந்த 28.4.2018இல் குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு வருஷாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மகா மண்டபத்தில் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

பின்னா், கலசங்களில் புனிதநீா் திருக்கோயில் பிரகாரங்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து கலசங்களுக்கு பட்டுவஸ்திரம் மாலை அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

சுவாமி-அம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி பஞ்சமூா்த்தி வீதியுலா நடைபெற்றது.

இவ்விழாவில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா.வெங்கடாசலம், கோயில் செயல் அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.