செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எதைப் பற்றியும் பேசுவேன்

தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எதைப் பற்றியும் பேசுவேன் என முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.

Updated On :14 மே 2018, 9:23 pm

தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எதைப் பற்றியும் பேசுவேன் என முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து ஹாசனில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நான் எதைப் பற்றியும் பேசமாட்டேன். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் மஜதவின் பலம் என்ன என்பது பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு தெரியவரும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை. கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று ஊடகங்கள் கூறுவதை நான் நம்ப தயாராக இல்லை.
தலித் ஒருவரை முதல்வராக்க தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறியிருப்பதற்கு நான் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.