சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மே 27-இல் மா.மன்னர், வி.டி.சண்முகம் உருவப் படத் திறப்பு விழா

பெங்களூரில் மே 27-ஆம் தேதி மாநில திமுக சார்பில் மா.மன்னர், வி.டி.சண்முகம் உருவப் படத் திறப்பு விழா நடைபெற உள்ளது.

Updated On :21 மே 2018, 10:53 pm

பெங்களூரில் மே 27-ஆம் தேதி மாநில திமுக சார்பில் மா.மன்னர், வி.டி.சண்முகம் உருவப் படத் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு, இராமசந்திரபுரத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் மே 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு மறைந்த மாநில திமுக முன்னாள் அவைத் தலைவரும், அண்ணா விருது பெற்றவருமான மா.மன்னர், மாநில திமுக முன்னாள் அமைப்பாளர் வி.டி.சண்முகம் ஆகியோரின் உருவப் படத் திறப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் வரவேற்புரையை பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி நிகழ்த்துகிறார். திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை தாங்குகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.அன்பழகன், எம்.இராமன், கே.சிகாமணி, எஸ்.பிரான்சிஸ், சிவலிங்கம், முருகமணி செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் குடியாத்தம் குமரன், தலைமைக் கழக பேச்சாளர் ம.வள்ளிமைந்தன், திமுக மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமி, துணை அமைப்பாளர்கள் பி.ராஜேந்திரன், குமுதா, போர்முரடு கதிரவன் உள்ளிட்டோர் புகழுரை ஆற்றுகின்றனர். க.நாராயணசாமி நன்றியுரை ஆற்றுகிறார். விழாவில் இலக்கிய அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணி, தொ.மு.ச. நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.