400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மாநில கட்சிகளை மக்கள் புறக்கணிப்பர்

காங்கிரஸை போல மாநிலக் கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பர் என கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

Updated On :25 மே 2018, 2:48 am IST

காங்கிரஸை போல மாநிலக் கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பர் என கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள குமாரசாமி, அஸ்வமேதயாக குதிரை போல தேசிய அளவில் ஓடி வந்த பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஓட்டத்தை கர்நாடகத்தில் தடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
குமாரசாமியின் தலைமையிலான மஜதவினர் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சந்தர்ப்பவாதக் கூட்டணியால் அவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஓட்டத்தை தடுத்துள்ளதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
முதல்வர் குமாரசாமி, பாஜக, பிரதமர் மோடிக்கு எதிரான கட்சிகளை கூட்டுச் சேர்க்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் சாத்தியமாகாது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை போல, மாநிலக் கட்சிகளையும் மக்கள் தோற்கடிப்பர். பாஜகவை அதிக தொகுதிகளில் வெற்றி அடையச் செய்துள்ளனர். என்றாலும், தேர்தலில் 149 தொகுதிகளில் வைப்புப் தொகையை இழந்து, மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள மஜத, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
அதிகாரத்தில் இல்லாத போது தேசியக் கட்சிகளைக் குறைகூறும் மஜத, அதிகாரத்துக்காக தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது எந்த வகையில் நியாயம்? குமாரசாமியை முதல்வராக்கியதன் மூலம் குருபா சமுதாயத்தின் எதிர்ப்பை முன்னாள் முதல்வர் சித்தராமையா சம்பாதித்துள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.