விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெங்களூரு-சிவமொக்கா ரயில் தாலகுப்பா வரை நீட்டிப்பு

பெங்களூரு-சிவமொக்கா விரைவு ரயில் தாலகுப்பா ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:30 am IST

பெங்களூரு-சிவமொக்கா விரைவு ரயில் தாலகுப்பா ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு-சிவமொக்கா இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் சேவையை தாலகுப்பா ரயில்நிலையம் வரை அக்டோபர் 10-ஆம் தேதி முதல் நீட்டிக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. 
இதன்படி, ரயில் எண்-20651 என்ற பெங்களூரு-சிவமொக்கா அதிவிரைவுரயில் அக்டோபர் 10-ஆம் தேதி முதல் தாலகுப்பா ரயில்நிலையம் வரை நீட்டிக்கப்படுகிறது. 
பெங்களூரில் இருந்து சிவமொக்கா வரைஅதிவிரைவு ரயிலாகவும், சிவமொக்காவில் இருந்து தாலகுப்பா வரை சாதாரண விரைவு ரயிலாகவும்
இயக்கப்படும். 
இதன்படி, தினம்தோறும் இரவு 7.55 மணிக்கு சிவமொக்கா ரயில்நிலையம் வருகைதரும் இந்த ரயில், அங்கிருந்து இரவு 8 மணிக்கு தாலகுப்பா புறப்படுகிறது. சிவமொக்காவில் இருந்து இரவு 9.08 மணிக்கு ஆனந்தபுரம் ரயில்நிலையம் வரும் இந்த ரயில், அங்கிருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.38 மணிக்கு சாகர்ஜம்புகரு ரயில்நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து இரவு 9.40மணிக்கு புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு தாலகுப்பா சென்றடைகிறது. பெங்களூரு-சிவமொக்கா இடையிலான நேரத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 
மறுமார்க்கத்தில், ரயில் எண்-20652-சிவமொக்கா-பெங்களூரு அதிவிரைவுரயில் தாலகுப்பா ரயில்நிலையத்தில் இருந்து அக்டோபர் 11-ஆம்தேதி முதல் தினமும் காலை 3.50 மணிக்கு புறப்பட்டு, சாகர்
ஜம்புகரு ரயில்நிலையத்துக்கு காலை 4.08 மணிக்கு வந்து காலை 4.10 மணிக்கு புறப்படுகிறது. அதன்பிறகு, காலை 4.38மணிக்கு ஆனந்தபுரம் ரயில்நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து காலை 4.40 மணிக்கு புறப்பட்டு, சிவமொக்காவுக்கு காலை 6.05 மணிக்கு வருகிறது. அங்கிருந்து காலை 6.40மணிக்கு பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறது. தாலகுப்பா-சிவமொக்கா இடையே சாதாரண விரைவுரயிலாகவும், சிவமொக்காவில் இருந்து பெங்களூருவரை அதிவிரைவுரயிலாகவும் இயக்கப்படுகிறது. சிவமொக்கா-பெங்களூரு இடையிலான நேரம் மற்றும் நிறுத்தங்களில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை. இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை பெட்டி, 18 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.