பெண் குழந்தைகளை கல்வியில் மேம்படுத்த வேண்டும் என்று போலரீஷ் இந்தியா குழுமத்தின் தேசியத் தலைவர் பங்கஜ் தூபே தெரிவித்தார்.
பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுராக் தலைமையில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் தில்லியில் இருந்து கடந்த செப். 26-இல் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் ஜெய்ப்பூர், ஜெய்சல்மர், அகமதாபாத், மும்பை, புணே, ஹுப்பள்ளி வழியாக பெங்களுருக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.
இந்தியன் மோட்டார்ஸ் சைக்கிள் விற்பனை வளாகத்தில் இவர்களை வரவேற்று, பங்கஜ் தூபே பேசியது:-
தேசிய அளவில் ஏழ்மையின் காரணமாக, பல சிறுமிகள் கல்வியை பாதியிலேயே விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சிறுமிகளை அடையாளம் கண்டு, அவர்களின் மேல்படிப்புக்கு உதவி செய்ய போலரீஷ் இந்தியா குழுமம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியை படிக்கும் விரும்பும் பெண்களுக்கும் உதவி செய்யத்
திட்டமிட்டுள்ளோம்.
தில்லியில் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்ட குழுவினர் பெங்களூரு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னை, விஜயவாடா, புவனேசுவரம், கொல்கத்தா, ஹவுரங்காபாத், லக்னெள வழியாக மீண்டும் தில்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
பயணத்தின்போது பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். பெங்களூரு வந்துள்ள மோட்டார் சைக்கிள் பயணக் குழுவினர் கொடிகேஹள்ளியில் உள்ள அரசுப்பள்ளியில் கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி, கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்

எரிபொருள் தட்டுப்பாடு: ரயிலில் சென்ற ராஜஸ்தான் துணை முதல்வர்!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
