தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சாலை விபத்துகளில் 6 பேர் சாவு

3 இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 6 பேர்உயிரிழந்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

3 இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 6 பேர்உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் சிரா வட்டம் கரேஜீவனஹள்ளி தரூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரியை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அப்போது வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து கிரேன் மீது மோதியுள்ளது. இதில் காரிலிருந்த ஓட்டுநர் வெங்கடேஷ், சிவக்குமார்,  ஹேமந்த் உள்ளிட்ட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  காயமடைந்த பிரஜ்வல், அசோக், அனில்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தும்கூரு மாவட்டம் திப்டூர் ஹுன்சகட்டாவைச் சேர்ந்த சரத் (24). இவர் புதன்கிழமை அதிகாலை வைட்டிசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.  இதில் படுகாயமடைந்த சரத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26).  இவர் புதன்கிழமை காலை தும்கூரு மாவட்டம் திப்டூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க்கில் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருந்தாராம்.  அப்போது வேகமாக வந்த மினி சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.  இதில் படுகாயமடைந்த சந்தோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.