திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பிரதமராக மோடி பதவி ஏற்றப் பிறகு 16 முறை பெட்ரோல் விலையைஉயர்த்தியதே பா.ஜ.க.வின் சாதனை

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றப் பிறகு 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதே பா.ஜ.க.வின் சாதனை என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றப் பிறகு 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதே பா.ஜ.க.வின் சாதனை என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், தும்கூரு அருகே உள்ள காங்காதரய்யா நினைவு அரங்கத்தில் கல்வித் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது: 
நாட்டில் பெட்ரோல்,  டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  டீசல் விலை உயர்வால், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு பெட்ரோல்,  டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மாநில அரசு வசூலித்து வரும் மேல் வரியைக் குறைப்பது சாத்தியமாகாது.  பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றப் பிறகு நாட்டில் 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.  இதுவே பாஜகவின் சாதனையாகும்.  மத்தியில் பாஜக பொறுப்பேற்றப் பிறகு ஏழை,  எளிய மக்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர் என்றார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்,  ஒருசில இடங்களில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.  எங்கெல்லாம் சாத்தியமாகிறதோ,  அங்கெல்லாம் மஜதவுடன் கூட்டணி அமைத்து அதிகாரத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளோம். பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.  இந்த விசாரணையில் பல தடயங்கள்,  சாட்சிகள் கிடைத்துள்ளன.  கிடைத்த தடயங்கள் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு,  பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.