புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

உன்னிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்... இருமுடி குழந்தை நட்சத்திரத்தைப் பாராட்டிய தனுஷ்!

குழந்தை நட்சத்திரம் நக்‌ஷத்ராவைப் பாராட்டிய தனுஷ்...

குழந்தை நட்சத்திரம் நக்‌ஷத்ரா

Published On :

இருமுடி கட்டு திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான இருமுடி கட்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த காலத்தில் வன்முறையான வாழ்க்கை வாழ்ந்த, குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மற்றும் அவரது மகளைச் சுற்றி இப்படத்தை கதை எழுதப்பட்டிருக்கிறது. மகளின் விருப்பத்திற்காக அவர் ஐயப்ப தீட்சை மேற்கொள்வதும், அதன் மூலம் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் கொண்ட உணர்வுப்பூர்வமான இக்கதையில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இருமுடி கட்டு திரைப்படம் இதுவரை ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முக்கியமாக, இந்தப் படத்தில் நடிகர் ரவி தேஜாவுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரமான நடிகை நக்‌ஷத்ராவுக்கு அதிக பாராடுகள் கிடைத்தன.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குநர் சிவா நிர்வாணாவுக்கு விடியோ கால் மூலம் அழைத்து தன் வாழ்த்துகளைக் கூறியதுடன், சிறுமி நக்‌ஷத்ராவிடம், “உன்னை நேரில் சந்திக்கும் போது, உன்னிடமிருந்து நடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் பிரமாதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறாய். அற்புதமாக இருந்தது. வாழ்த்துகள் கண்ணா” எனப் பாராட்டியுள்ளார். இதனைக் கேட்ட நக்‌ஷத்ரா நன்றி சொல்லும் நெகிழ்ச்சியான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Actor Dhanush has praised the child star who acted in the movie Irumudi Kattu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.