கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி ரவி தேஜாவின் இருமுடி கட்டு!

ரவி தேஜாவின் இருமுடி கட்டு திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது....

ரவி தேஜா

Updated On :

நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியான இருமுடி கட்டு திரைப்படம் அசத்தலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கிய திரைப்படம் இருமுடி கட்டு. இந்தப் படத்தில் நடிகர் ரவி தேஜா நாயகனாகவும் நாயகியாக பிரியா பவானி ஷங்கரும் நடித்திருந்தனர். தன் மகளைப் போன்ற பிற குழந்தைகளையும் நினைக்கும் நாயகன் பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதாக திரைப்படத்தின் கதை உருவாகியிருந்தது.

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், படத்தில் நாயகனின் மகளாக நடித்த நடிகை பேபி நக்‌ஷத்திராவும் கவனம் ஈர்த்துள்ளார்.

முக்கியமாக, இப்படத்தின் வெற்றிக்கு ஜிவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பும் காரணமாக அமைந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற, வில்லாளி வீரனே பாடலுக்கு ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் நடனமாடி கொண்டாடி வருகின்றனர். விரைவாகவே, இப்படம் ரூ. 100 கோடி வசூலை அடையும் எனத் தெரிகிறது.

The movie Irumudi Kattu, starring actor Ravi Teja, is receiving a fantastic reception.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.