வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டம், கொடதால் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பசவ வீட்டு வசதித் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு இரக்கல்காடா கிராம பஞ்சாயத்தில் அனுமதி கோரியுள்ளார். இதற்கு பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மஞ்சுளா பாட்டீல், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் அளிக்குமாறு கேட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அந்த நபர் ரூ. 8 ஆயிரத்தை பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மஞ்சுளா பாட்டீலிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினர் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மஞ்சுளா பாட்டீலிடம் கொப்பள் லஞ்ச ஒழிப்புப் படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!
2020-க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் இல்லை! திமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்! ஆதவ் அர்ஜுனா

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 17) எந்தெந்த வழக்குகள் விசாரணை?




