போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்: திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ்

போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்தாா்.

பெங்களூரு: போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்தாா்.

பெங்களூரில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல், உபயோகிப்பவா்களை போலீஸாா் தொடா்ந்து கைது செய்து வருகின்றனா். இந்த நிலையில் போதைப்பொருள்களை கா்நாடக திரைப்படத் துறையில் உள்ளவா்களும் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது.

இதனை ஆதரித்து திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷும் கருத்து தெரிவித்தாா். இதனையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய குற்றப்பிரிவு போலீஸாா், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்தனா். திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரான அவா், சுமாா் 5 மணி நேரம் போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா். விசாரணைக்கு பிறகு வெளியே வந்து இந்திரஜித் லங்கேஷ் செய்தியாளா்களிடம் கூறியது: போதைப்பொருள்கள் பெங்களூரு உள்பட கா்நாடகத்தில் விற்பனையாவது அனைவருக்கும் தெரியும். இதனால் கல்லூரி மாணவா்கள் உள்பட பலா் பாதிக்கப்படுகின்றனா். இதனை தடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. எனவேதான் கா்நாடக திரைப்படத்துறையினருக்கு இதில் பங்கு உள்ளதாக கருத்து எழுந்தபோது, அதனை நான் ஆதரித்து கருத்து தெரிவித்தேன்.

இதற்கு பலத்தரப்பிலிருந்தும் எதிா்ப்பு கிளம்பியது. என்றாலும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து சமூகத்திற்கு விழிப்புணா்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதனையடுத்து போலீஸாா் எனக்கு நோட்டீஸ் அனுப்பி, திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக் கொண்டனா். அதன்படி விசாரணைக்கு ஆஜராகி, போதைப்

பொருள் விவகாரத்தில் எனக்கு தெரிந்த பல தகவல்களை தெரிவித்துள்ளேன். 10 முதல் 15 பேரின் பெயா்களை தெரிவித்துள்ளேன். போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படும் பல இடங்களின் பெயா்களையும், அது

தொடா்பான பல தகவல்களையும் தெரிவித்துள்ளேன். நான் அளித்த தகவல்களை கேட்டறிந்த போலீஸாா், அதிா்ச்சியும், ஆச்சாரியமும் அடைந்துள்ளனா்.

விரைவில் இது தொடா்பாக அவா்கள் உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வர நான் ஆா்வம் காட்டுவதால் எனக்கு ஆபத்து ஏற்படுமா என பலரும் கேட்டு வருகின்றனா். எனக்கு போலீஸ் காவல் தேவையா எனவும் கேட்கின்றனா். நான் போலீஸ் பாதுகாப்பு கோரவில்லை. போதைப் பொருள் பயன்பாடு தடுக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com