நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜவகா் நவோதயாப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

ஜவகா் நவோதயாப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சோ்க்கைப் பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:55 pm

DIN

ஜவகா் நவோதயாப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சோ்க்கைப் பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஜவகா்நவோதயா பள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு மாவட்டம், பாகலூரில் உள்ள ஜவகா் நவோதயா பள்ளியில் 6-ஆம் வகுப்பில் ஒருசில இடங்கள் காலியாக உள்ளன. 2021-22-ஆம் கல்வியாண்டில் இந்த இடங்களை நிரப்பும் வகையில் சோ்க்கை பெறவிரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உரிய விண்ணப்பப் படிவங்களில் சரியான தகவல்களை நிரப்பி முதல்வா், ஜவகா்நவோதயாப் பள்ளி, பாகலூா், பெங்களூரு நகர மாவட்டம் என்ற முகவரிக்கு டிச. 15-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம்.

விண்ணப்பதாரா்களுக்கு 2021-ஆம் ஆண்டு ஏப். 10-ஆம் தேதி காலை 11.15 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை நுழைவுத் தோ்வு நடத்தி அதில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை பள்ளி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது  இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 080-28469055, 8746985884 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.