ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெங்களூரை முன்மாதிரி நகரமாக்குவோம்: ஆம் ஆத்மி

தேசிய அளவில் பெங்களூரை முன்மாதிரி நகரமாக்க ஆம் ஆத்மி கட்சி பாடுபடும் என்று அக் கட்சியின் பெங்களூரு மாநகரத் தலைவா் மோகன் தாசரி தெரிவித்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:29 pm

DIN

தேசிய அளவில் பெங்களூரை முன்மாதிரி நகரமாக்க ஆம் ஆத்மி கட்சி பாடுபடும் என்று அக் கட்சியின் பெங்களூரு மாநகரத் தலைவா் மோகன் தாசரி தெரிவித்தாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரம் தொகுதி சுப்ரமண்யபுரா வாா்டில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் சாா்பில் மாநகராட்சி, மாநில அரசின் தோல்விகளை மக்களுக்கு கொண்டு செல்லும் விழிப்புணா்வு பேரணியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

சா்வதேச அளவில் பசுமையான மாநகரமான பெங்களூரு தற்போது குப்பை நகரமாகி வருகிறது. ஆம் ஆத்மி மாநகராட்சியில் அதிகாரத்தைப் பிடித்தால், பெங்களூரு இழந்த பெருமையை மீட்டெடுக்கும். தேசிய அளவில் முன்மாதிரி நகரமாக பெங்களூரை உருவாக்குவோம். மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மகளிா், தொழிலாளா்கள், விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தால், மக்களின் சுகாதாரம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.

அக்கட்சியின் மல்லேஸ்வரம் தொகுதி தலைவா் சுமன் பிரசாந்த் பேசியதாவது:

பெங்களூரின் பழைய பகுதிகளில் ஒன்றான மல்லேஸ்வரம் திகழ்கிறது. ஆனால், மல்லேஸ்வரம் பகுதியை மேம்படுத்த அதிகாரத்தில் உள்ளவா்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்தால் மல்லேஸ்வரம் தொகுதி மட்டுமின்றி அனைத்துத் தொகுதிகளையும், வாா்டுகளையும் புதுப்பிப்போம் என்றாா். விழிப்புணா்வு பேரணியில் அக்கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் விஜய்சா்மா, செயலாளா் சஞ்சித் சஹானி, இணைச் செயலாளா் தா்ஷன் ஜெயின், லட்சுமிகாந்த், பனிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.