முன்னாள் முதல்வா் குமாரசாமியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமா் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் பிரதமா் தேவெகௌடாவின் மகனும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி புதன்கிழமை தனது 61-ஆவது பிறந்த தினத்தை எட்டினாா். கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என அவா் கூறியிருந்த நிலையில், புதன்கிழமை மஜத அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் அவரது பிறந்த நாளை எளிமையான முறையில் மஜதவினா் கொண்டாடினா்.
குமாரசாமியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமா் மோடி, தனது சுட்டுரையில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அதில் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் தர வேண்டும் என வேண்டிக் கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.
குமாரசாமிக்கு, முதல்வா் எடியூரப்பா, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, துணை முதல்வா் சி.என்.அஸ்வத் நாராயணா, அமைச்சா்கள் கே.சுதாகா், பசவராஜ் பொம்மை, ஸ்ரீராமுலு, மக்களவை உறுப்பினா்கள் பி.சி.மோகன், பிரதாப்சிம்ஹா, ஷோபா கரந்தலஜே உள்ளிட்டோா் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.