திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 5, 650 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) தொடக்கி வைத்தார்.
நீலரிகி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மோடி தொடக்கி வைத்தார். கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் வகையில் 370 கி.மீ. சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டிற்கு 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.
நாகா்கோவில் - சாா்லபள்ளி அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06357), கோவை போத்தனூா் - தன்பத் அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06619), ராமேசுவரம் - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06621), திருநெல்வேலி - மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06708), மயிலாடுதுறை - காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் (06835) ஆகிய 5 ரயில் சேவைகளைத் தொடக்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
''திருச்சிக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமானது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் திட்டங்கள் அடிக்கல் நாட்டப்படுவதில் மகிழ்ச்சி. பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசுபாடு குறையும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
கடந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் வந்திருந்தேன். விவசாயிகள் முதல் மாணவர்கள் வரை பயன்பெறுகின்றனர்.
4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும். இந்த கட்டமைப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக கேஸ் (சமையல் எரிவாயு) வழங்குவதை உறுதி செய்யும்.
இத்திட்டத்தின் மூலம் 200 வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு கிடைக்கும். 201 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படும். இந்தத் திட்டங்கள் மூலம் எரிசக்தித் திறன் அதிகரித்து போக்குவரத்து வசதிகள் மேம்படும்.
கடந்த வாரம் மதுரை வந்தபோது அம்ருத் பாரத் திட்டத்தின்படி 8 ரயில் நிலையங்களைத் தொடக்கிவைத்தோம். இன்று பல புதிய ரயில்கள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. இவை தென் மாவட்டங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது.
இதனால், உள்ளூர் பொருளாதாரம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மேம்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்போடு மத்திய அரசு உழைக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.
summary
Piped gas connections for 9 lakh families: Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

தில்லியில் 2 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

மேலும் 5 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...


