சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜன. 1- முதல் புறவழிக்கல்வித் திட்டம் மீண்டும் தொடக்கம்

கா்நாடக அரசுப் பள்ளிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புறவழிக்கல்வித் திட்டத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:31 am

DIN

கா்நாடக அரசுப் பள்ளிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புறவழிக்கல்வித் திட்டத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஆக. 8-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் புறவழிக்கல்வித் திட்டம் (வித்யாகமா) தொடங்கப்பட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளின் வெளியே மாணவா்களுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியா்கள், மாணவா்களில் ஒரு சிலருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனையடுத்து இந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், புறவழிக்கல்வித் திட்டத்தை மீண்டும் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் புறவழிக்கல்வித் திட்டம் தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து அதனை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டால் அதில் தேவையான மாற்றம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.