தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷா, கடந்த மூன்று மாதங்கள் எந்தப் படத்திலும் ஒப்புக் கொள்ளாததால், அவர் சினிமாவில் இருந்து விலகப் போகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் விருப்பத்துக்குரிய நடிகையான த்ரிஷா, சூரியாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
கடந்த 24 ஆண்டுகளில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய், சூரியா, விஜய் சேதுபதி, சிம்பு என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு விஜய்யின் லியோ, 2025 ஆம் ஆண்டில் தக் லைப், விடாமுயற்சி படங்களிலும் நடித்திருந்தார் த்ரிஷா.
சர்ச்சைகளுக்குப் பெயர்போன த்ர்ஷா சமீபத்தில் நடைபெற்ற ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன், ஒரே நிற உடையில் ஒரே காரில் சென்று பங்கேற்றது சர்ச்சைக்குள்ளானது. அதன்பின், தனியார் நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து நடிகர் பார்த்திபன் கூறிய கருத்துகளும் சர்ச்சையானது.
இந்த நிலையில், 42 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா திடீரென சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. நடிகை திரிஷா சினிமாவில் அறிமுகமானத்தில் இருந்து இதுவரை 75 படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது. மௌனம் பேசியதே, ஆறு, ஆயுதஎழுத்து உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சூரியாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும், த்ரிஷாவின் நடிப்பில் மலையாளத்தில் 'ராம்', தெலுங்கில் 'விஸ்வம்பரா' படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
3 மாதங்களுக்கு மேலாக புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாத த்ரிஷா, சமீபத்தில் தெலுங்கு இயக்குநர் ஒருவரின் படத்தை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய இணையத் தொடர்களையும் அவர் ஏற்கவில்லை.
திரிஷாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? என கேள்வி எழுந்துள்ளது. மேலும், முழு நேர சினிமாவில் இருந்து விலகவுள்ள த்ரிஷா, அரசியலில் ஈடுபடவுள்ளாரா? அல்லது என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியும், சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Summary
Trisha, a leading actress in the Tamil film industry, has not signed any films in the last three months, raising doubts as to whether she is going to quit the film industry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது: த்ரிஷா
த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

