நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
நடிகர்கள் கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதன் அறிவிப்பு புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் அனிருத்தின் பின்னணி இசை டிரெண்டிங் ஆனது.
மேலும், இப்படத்தை முழுமையாக பிலிம் கேமராவில் படமாக்க இயக்குநர் நெல்சன் முடிவு செய்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும் படத்தை 2027 தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி, கமல் இருவர் படத்திலும் நாயகியாக நடித்துள்ள த்ரிஷா, இருவரும் இணைந்து நடிக்கும் படத்திலும் இணைந்திருப்பது ஆவலைஅதிகரித்துள்ளது.
Actress Trisha has reportedly been signed to star in the film featuring actors Rajinikanth and Kamal Haasan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒவ்வொரு பெண்ணுக்கும் அரண்; சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு கமல் வாழ்த்து!
த்ரிஷா, நயன்தாரா இணைந்து வெளியிட்ட ‘டபுள் ஆக்குபன்சி’ பட டிரைலர்!

மேஜிகல் மே, மற்றொரு வெற்றி: இணையத்தில் வைரலாகும் த்ரிஷா பதிவு!

கருப்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




