நடிகை த்ரிஷாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் அவர் ஆட்சியமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆதரவுக்கட்சிகளால் முதல்வராக விஜய் ஆட்சியமைப்பார் என்றே தெரிகிறது.
வாக்கு எண்ணிக்கையின்போது, சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வந்த த்ரிஷா ஒரு மணி நேரத்துக்கு மேல் அவருடன் இருந்துவிட்டு கிளம்பிச் சென்றார். விஜய்யும் த்ரிஷாவும் நெருக்கமாக இருப்பதால் திரைத்துறையைச் சேர்ந்த சிலர், நேற்று த்ரிஷாவின் பிறந்த நாளில், இதைவிட சிறந்த பிறந்த நாள் பரிசு இருக்க முடியாது என மறைமுகமாக ஆட்சியைக் குறிப்பிட்டு வாழ்த்தினர்.
இந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு த்ரிஷா அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், த்ரிஷா, “எனக்கு உண்மையாகவே முதலமைச்சர் ஆக வேண்டுமென ஆசை இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் பாருங்கள்” என சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.
தற்போது, இந்த விடியோவை பலரும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அன்று த்ரிஷாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Actress Trisha's speech has gone viral on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேஜிகல் மே, மற்றொரு வெற்றி: இணையத்தில் வைரலாகும் த்ரிஷா பதிவு!

கண்டிப்பா தளபதிகிட்ட சொல்றேன்... ரசிகருக்கு பதிலளித்த த்ரிஷா!

வைரலான ஓவியா!

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



