மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!விஜய்யைத் தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்பதவியேற்பு விழாவில் விஜய் - ராகுல் காந்தி ஒரே மேடையில்... விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்
/

விஜய் பதவியேற்பு விழா: த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு!

நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றுள்ளது குறித்து...

News image

நடிகை த்ரிஷா - படம்: பிடிஐ

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில், விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மைக்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்கிறார்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மே 10) நடைபெறுகிறது.

விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

திரையுலகத்தைச் சேர்ந்த நடிகை த்ரிஷா, நடிகர்கள், ஜெய், சஞ்ஜீவ், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Summary

As TVK leader Vijay is set to be sworn in today (May 10) as the Chief Minister of Tamil Nadu, many members of the film fraternity including actress Trisha have gathered to attend the swearing-in ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.