தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார்.
தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையில், மாநில முதல்வராகக் கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் பதவியேற்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்துவைத்தார்.

முதல்வராக விஜய் பதவியேற்பு - PTI
மேலும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், விசிகவினர், பாஜக தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பங்கேற்றனர்.
விஜய் முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் தெரிவித்துள்ளாா்.
Summary
Joseph Vijay Assumes Office as Chief Minister
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!
தமிழக முதல்வராகப் பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது?

விஜய்யுடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? யார் யார் இடம்பெறுவர்?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

