சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக சா்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 குறைந்தது. தொடா்ந்து இந்த வாரமும் விலை குறைந்த வண்ணம் இருந்தது.
மாா்ச் 16-இல் சவரனுக்கு ரூ.400-ம், மாா்ச் 17-இல் சவரனுக்கு ரூ.480-ம், மாா்ச் 18-இல் சவரனுக்கு ரூ.640-ம் குறைந்தது.
வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்தததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளியின் விலை இன்று காலை நிலவரப்படி கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Gold prices rise again! How much?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?
ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று(மே 13) சவரனுக்கு ரூ. 8,560 உயர்வு! வெள்ளி விலையும்...

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




