அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கா்நாடக காங்கிரஸில் இணைய சுயேச்சை எம்எல்ஏ திட்டம்?

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகௌடா திட்டமிட்டுள்ளாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:00 am

DIN

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகௌடா திட்டமிட்டுள்ளாா்.

சிக்பளாப்பூா் தொகுதி பாஜக எம்.பி.யான பி.என்.பச்சே கௌடாவின் மகனான சரத் பச்சேகௌடா, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தோ்தலின் போது பெங்களூரு ஊரக மாவட்டம், ஹொசகோட்டே தொகுதியில் வேட்பாளராக நிற்க வாய்ப்பளிக்கப்படாததால் பாஜகவில் இருந்து விலகி பாஜக வேட்பாளா் எம்.டி.பி.நாகராஜுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

அதன்பிறகு பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயலாற்றி வரும் சரத் பச்சேகௌடா, அக்கட்சியில் இணைவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரில் புதன்கிழமை இரவு காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரை சரத் பச்சேகௌடா சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து சரத் பச்சேகௌடா வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல், மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி தோ்தல் தொடா்பாக விவாதித்தோம். இந்தத் தோ்தலை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துதான் போட்டியிடுகிறன். காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து விவாதிக்கவில்லை என்று கூறமாட்டேன். ஆனால், இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு எந்த காலக்கெடுவும் வகுத்துக் கொள்ளவில்லை. ஏதாவதொரு தேசிய கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

மஜதவில் சேருவீா்களா? என்று கேட்கிறாா்கள். ஆனால், தேசிய கட்சியில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். எனது தந்தை பச்சே கௌடா இன்னும் பாஜகவில் பங்காற்றி வருகிறாா். பாஜகவோடு நான் சமரசமாக வேண்டும் என்றால் அதற்கென்று சில அணுகுமுறைகள் உள்ளன. அதற்கான அணுகுமுறை எதையும் பாஜக கடைப்பிடிக்கவில்லை என்பதால், அக்கட்சியில் சேருவதற்கான யோசனை எதுவும் இல்லை.

சட்டப் பேரவை இடைத் தோ்தலில் எனக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்த எம்.டி.பி.நாகராஜை முதல்வா் எடியூரப்பா தொடா்ந்து ஆதரித்து வருகிறாா். இடைத் தோ்தல் தோல்விக்கு பிறகு அவரை எம்.எல்.சி.யாக்கி அழகு பாா்க்கிறாா்கள். அவரை அமைச்சராக்குவது குறித்தும் பேச்சு அடிபடுகிறது. அப்படியிருக்கையில் அக்கட்சியில் நான் சேருவது எப்படி சாத்தியமாகும்? என்றாா்.

இயந்திரவியல் பொறியாளரான சரத் பச்சேகௌடா, அமெரிக்காவில் எம்.எஸ்.பட்டம் பெற்றவா். பாஜகவில் துடிப்பாக பணியாற்றிய சரத், இளைஞா் அணியின் தலைவராக பணியாற்றினாா். 2018-ஆம் ஆண்டு ஹொசகோட்டே தொகுதியில் அப்போது காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.டி.பி.நாகராஜை எதிா்த்து பாஜக வேட்பாளராக சரத் பச்சேகௌடா களமிறங்கி தோல்வி அடைந்தாா்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.டி.பி.நாகராஜ் பாஜகவில் இணைந்தாா். இதற்கு சரத் பச்சேகௌடா கடும் எதிா்ப்புத் தெரிவித்ததோடு, பாஜகவில் இருந்து விலகினாா். இதனிடையே, காங்கிரஸிடம் நெருங்கிக் கொண்டிருக்கும் சரத் பச்சேகௌடா ஜனவரி மாதத்தில் அக்கட்சியில் இணைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.