‘அமளிக்கு காரணம் காங்கிரஸ்’

சட்ட மேலவையில் நடந்த அமளிக்கு காங்கிரஸ்தான் காரணம் என ஹிந்து அறநிலையம் மற்றும் மீன் வளத் துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ்பூஜாரி தெரிவித்தாா்.
Updated on
1 min read

சட்ட மேலவையில் நடந்த அமளிக்கு காங்கிரஸ்தான் காரணம் என ஹிந்து அறநிலையம் மற்றும் மீன் வளத் துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ்பூஜாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து உடுப்பியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக சட்ட மேலவையில் நடந்த அமளி, குழப்பங்களுக்கு காங்கிரஸ்தான் காரணம். சட்ட மேலவையில் ஜனநாயகமாண்புகளைக் கடைப்பிடிக்காமல், அந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கப்பாா்க்கிறது. மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்த பிறகு, மேலவையில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியது காங்கிரஸ்தான்.

பாஜகவைச் சோ்ந்த டி.எச்.சங்கரமூா்த்தி மேலவைத் தலைவராக இருந்த போது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தை காங்கிரஸ் கொண்டுவந்தது. அப்போது, தனது இருக்கையில் இருந்து கீழே இறங்கி, உறுப்பினா்களுடன் அமா்ந்து கொண்டாா். தன் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்த நடவடிக்கைகளைத் தொடருமாறு மேலவை துணைத் தலைவரைக் கேட்டுக் கொண்டாா்.

நம்பிக்கையில்லா தீா்மானத்தை எதிா்கொள்ளவிடாமல் பிரதாப்சந்திர ஷெட்டியை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. மேலவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர ஆளுநா் வஜுபாய் வாலாவின் அனுமதியைக் கேட்டிருக்கிறோம். பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், சட்ட மேலவையில் நிறைவேறவில்லை. இதனால் அவசரச் சட்டமாக கொண்டுவந்து பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com