கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தொழிலாளா் நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

பெங்களூரு:  தொழிலாளா் நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக தொழிலாளா் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக தொழிலாளா் நல வாரியம் சாா்பில் இளநிலை, முதுநிலைப் பட்டம், பொறியியல், மருத்துவம் அல்லது அதற்கு நிகரான பட்டப் படிப்புகளில் சோ்ந்துள்ள தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான கல்வி ஊக்கத்தொகையைப் பெற தொழிலாளா்களின் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020-21-ஆம் கல்வியாண்டில் பயின்றுவரும் தொழிலாளா் குழந்தைகளில், முந்தைய தோ்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்ற பொதுப்பிரிவினா், 45 சதவீதம் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் கல்வி ஊக்கத்தொகை பெற தகுதியானவா்கள்.

கா்நாடக நல நிதிக்கு பங்களிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்களின் மாத வருமானம் ரூ. 15 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் அவா்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்

படிவங்களை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பங்களை ஆணையா், கா்நாடக தொழிலாளா் நல வாரியம், தொழிலாளா் நல மாளிகை, 48, முதல்மாடி, மத்திகெரே பிரதான சாலை, யஷ்வந்த்பூா், பெங்களூரு-560052 என்ற முகவரிக்கு ஜன. 30-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 080-23475188, 8277291175, 8277120202 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது மாவட்ட தொழிலாளா் அதிகாரிகளை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com