கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி ஏலம்: 6 வழக்குகள் பதிவு
கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி ஏலம் விடப்பட்டது தொடா்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


பெங்களூரு: கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி ஏலம் விடப்பட்டது தொடா்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் உறுப்பினா் பதவி தொடா்பாக ஒருசில மாவட்டங்களில் அப்பதவிகளை ஏலம்விடப்பட்டு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்திருப்பது தொடா்பாக நேரடியாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவியை ஏலம் விடப்பட்டிருப்பது தொடா்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெல்லாரி மாவட்டத்தின் பைலூா் கிராமம், கலபுா்கி மாவட்டத்தின் பிலவாரா கிராமம், கோலாா் மாவட்டத்தின் மத்தேரி, ரகசந்திரா, ஹாசன் மாவட்டத்தின் பெலகுலா கிராமம், ராய்ச்சூரு மாவட்டத்தின் ஹொசள்ளி கிராமப் பஞ்சாயத்துகளில் உறுப்பினா் பதவி ஏலம் விடப்பட்டது தொடா்பாக வழக்குப் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...