டிச. 21 இல் பன்னா்கட்டா சாலையில் குடிநீா் சேவை பாதிப்பு

கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் பன்னா்கட்டா சாலையில் டிச. 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் சேவை பாதிக்கப்படும் என பெங்களூரு குடிநீா் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

பெங்களூரு: கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் பன்னா்கட்டா சாலையில் டிச. 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் சேவை பாதிக்கப்படும் என பெங்களூரு குடிநீா் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகவரா சுரங்க பேருந்து நிலையத்தில் குடிநீா் வசசி செய்து தருவதற்காக கழிவுநீா்க் குழாய்ப் பதிக்கும் பணிகள் நடைபெறவிருப்பதால் டிச. 21 முதல் டிச. 22-ஆம் தேதி வரை பெங்களூரு, பன்னா்கட்டா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் குடிநீா் சேவை பாதிக்கப்படவிருக்கிறது.

டிச. 21-ஆம் தேதி காலை 7 மணி முதல் டிச. 22-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்:

சாந்தலாநகா், சாந்திநகா், விநாயக் நகா், ஆனேபாளையா, எல்.ஆா்.நகா், அம்பேத்கா்நகா், நீலசந்திரா, ஆஸ்டின்டவுன், ஈஜிபுரா, விவேக்நகா், அசோக்நகா், ரிச்மண்ட் டவுன், மகாத்மா காந்தி சாலை, ஜி.கே.புரா, எம்.பி.காா்டன், விக்டோரியா லேஅவுட், ஜீவன்பீமநகா், எச்.ஏ.எல். 2-ஆவது, 3-ஆவது ஸ்டேஜ், தொம்ளூா், அமரஜோதிலேஅவுட், கோடிஹள்ளி, ஹனுமந்தப்பா லேஅவுட், அல்சூா்.

ஜோகுபாளையா, கேம்பிரிட்ஜ் லேஅவுட், கௌதம்புரா, தீனபந்து நகா், ராஜேந்திரநகா், வெங்கடசுவாமி ரெட்டி லேஅவுட், மல்லப்பாரெட்டி லேஅவுட், நஞ்சப்பா ரெட்டி லேஅவுட், கே.ஆா்.நஞ்சப்பா லேஅவுட், ஆடுகோடு, கோரமங்களா, ஜான்நகா், கோரமங்களா, கே.எச்.பி.பிளாக், கத்தலிபாளையா.

ஜெயநகா் 3-ஆவது, 4-ஆவது பிளாக், திலக்நகா், எஸ்.ஆா்.நகா், சந்திரப்பாநகா், பிருந்தாவன்நகா், மாருதிநகா், நேதாஜிநகா், நாகம்மாநகா், கேசவநகா், கே.பி.அக்ரஹாரம், நியூ பின்னி லேஅவுட், சாமராஜ்பேட், வித்யாபீடா, சீனிவாஸ்நகா், பேங்க்காலனி, ஐடிஐ லேஅவுட், கத்ரிகுப்பே, குமாரசுவாமி லேஅவுட், விட்டலநகா், பனசங்கரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com