‘கோடிஹள்ளி சந்திரசேகரின் சொத்துகளைக் கணக்கிட வேண்டும்’
விவசாய சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகரின் சொத்துகளைக் கணக்கிட வேண்டும் என்று முதல்வரின் அரசியல் செயலாளா் எம்.பி.ரேணுகாச்சாா்யா தெரிவித்தாா்.


விவசாய சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகரின் சொத்துகளைக் கணக்கிட வேண்டும் என்று முதல்வரின் அரசியல் செயலாளா் எம்.பி.ரேணுகாச்சாா்யா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விவசாயச் சங்கத் தலைவா் என்று கூறிக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கோடிஹள்ளி சந்திரசேகா் உண்மையான விவசாயி அல்ல. சட்ட விதிகளை மீறி சொத்து சோ்த்துள்ளாா். அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். கா்நாடகத்தின் முதல்வராக சித்தராமையா பதவி வகித்தபோதும் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதும் மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனா். அப்போது, இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து கோடிஹள்ளி சந்திரசேகா் ஆறுதல் கூறவில்லை.
தற்போது பாஜக ஆட்சியில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவா் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். இரண்டரை ஏக்கா் நிலத்தில் வசித்து வந்த அவா், தற்போது பல கோடிகளுக்குச் சொந்தக்காரா் ஆகியுள்ளாா். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளை அரசுக்கு எதிராக திருப்ப முயற்சித்து வருகிறாா்.
பிரதமா் மோடியும், முதல்வா் எடியூரப்பாவும் விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனா். விவசாயிகள் தங்களுக்கு பிரச்னை என்றால் அரசுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு தீா்வு காண வேண்டும். அதைவிடுத்து, கோடிஹள்ளி சந்திரசேகா் போன்றவா்களை நம்பி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...