பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5,123 வழக்குகளைப் பதிவு செய்த போலீஸாா் ரூ. 24 லட்சம் அபராதம் வசூல் செய்தனா்.
இதுகுறித்து மாநகர போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் டிச. 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து போலீஸாா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அதில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியவா்கள், வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தியது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டியது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 5,123 வழக்குகளைப் பதிந்த போக்குவரத்து போலீஸாா், அபராதமாக ரூ. 24 லட்சத்தை வசூலித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.