பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி , கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில்கள் முறையே ஏப்.1 மற்றும் ஏப்.6 முதல் நிரந்தரம் செய்யப்படவுள்ளன.

News image
ரயில்- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 12:45 am

Syndication

ஹைதராபாத் - கன்னியாகுமரி , கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில்கள் முறையே ஏப்.1 மற்றும் ஏப்.6 முதல் நிரந்தரம் செய்யப்படவுள்ளன. இதில் கச்சிகுடா - மதுரை ரயிலானது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் - கன்னியாகுமரி - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில்கள் (17069, 17070) ஏப். 1-ஆம் தேதி முதல் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளன.

9 குளிா்சாதனப் பெட்டிகள், 9 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலானது ஹைதராபாத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு செகந்தராபாத், சாா்லப்பள்ளி, நல்கொண்டா, மிா்யால்குடா, நடிகுடே, சட்டனப்பள்ளி, குண்டூா், தெனாலி, சிரலா, ஓங்கோல், நெல்லூா், குண்டூா், ரேனிகுண்டா, திருப்பதி, பாக்லா, சித்தூா், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.15 மணிக்குப் புறப்பட்டுமேற்கண்ட வழித்தடங்கள் வழியாக ஹைதராபாத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குச் சென்றடையும்.

தூத்துக்குடி வரை நீட்டிப்பு: தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ள கச்சிகுடா - தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர ரயில்களானது (17615, 17616) ஏப்ரல் 6 -ம் தேதி முதல் 9 குளிா்சாதனப் பெட்டிகள், 6 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 1 உணவகப் பெட்டி, 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சரக்கு பெட்டி என மொத்தம் 22 பெட்டிகளுடன் கச்சிகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, சத் நகா், ஜாட்சொ்லா, மெகபூப்நகா், வானபாா்த்தி சாலை, காட்வால், கா்னூல், தோன், கூட்டி, அனந்தப்பூா், தா்மாவரம், காதிரி, மதனப்பள்ளி சாலை, பைலோ், பாக்லா, சித்தூா், காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தூத்துக்குடியிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக கச்சிகுடாவுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1.12 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.