ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சாலை விபத்து: இளைஞா் பலி

கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

பெங்களூரு: கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்துள்ளாா்.

பெங்களூரு வா்த்தூரைச் சோ்ந்தவா் கிரண்குமாா் (29). இவா், ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் ராமமூா்த்தி நகருக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். வெளிவட்டச் சாலை காா்த்திக் நகா் பேருந்து நிறுத்தத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த கிரண்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். இது குறித்து எச்.ஏ.எல் விமான நிலைய போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.