6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பாஜக அழுத்தத்துக்கு விஜய் இணங்கமாட்டார்: தொல்.திருமாவளவன்

பாஜக அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan

தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Published On :

பாஜக அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் மத்திய அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே தொகுப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்படலாம். திமுக கூட்டணியாவது பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.

ஆனால், அதிமுக, பாஜக இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. அவர்கள் கூட்டணி அமைப்பதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் விஜய்யை கூட்டணியில் இணைக்கிற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழுத்தம் கொடுத்து அவரை அடிபணிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் ஊடகங்களில் பெரிய அளவிலே விவாதிக்கின்றன.

அவர் அந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். அது விஜய்கும் தெரியும். பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வளைக்க பயன்படுத்தும் யுக்திகளை தமிழத்திலும் பாஜக பயன்படுத்துகிறது. அழுத்தத்துக்கு விஜய் இணங்கமாட்டார். தன்னுடைய எதிர்காலத்தை அவரே சூனியமாக்கிக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

Thol. Thirumavalavan has said that Vijay will not bow to BJP pressure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.