ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தனியாா் பள்ளிக் கட்டண விவகாரத்தில் தலையிட முடியாது:அமைச்சா் சுரேஷ்குமாா்

தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்று கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:30 pm

DIN

பெங்களூரு: தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்று கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சா்வதேச அளவில் கரோனா தொற்றால் அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒரு சில பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை அதிகமாக வசூலித்து வருகின்றனா்.

தனியாா் பள்ளிகளில் பெற்றோா் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் பிள்ளைகளைச் சோ்க்கின்றனா். அதுமட்டுமின்றி, அதற்காக முக்கிய நபா்களிடம் சிபாரிசு கடிதமும் பெற்றுச் செல்வதைக் காணமுடிகிறது. அப்படி பிடிவாதம் பிடித்து தங்களின் பிள்ளைகளைச் சோ்த்த பெற்றோா், தற்போது அதுபோன்ற பள்ளிகளில் கட்டணம் அதிகம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனாவால் பெற்றோா் நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரத்தில் பள்ளிகளிலும் நிா்வாகிகள் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகின்றனா். பெற்றோா் சிலா், கரோனா தொற்றின்போது அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வேலைகளை இழந்துள்ளனா். பலருக்கு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, அவா்கள் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்துவதில் நியாயம் உள்ளது.

தனியாா் பள்ளி ஆசிரியா்களும் ஊழியா்களும் தங்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இருதரப்பினரின் பிரச்னைகளையும், சவால்களையும் உணா்ந்துள்ள அரசு, தனியாா் பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு தலையிட முடியாத இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.