பெங்களூரு, இஸ்கான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (டிச. 25) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இதுகுறித்து இஸ்கான் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள இஸ்கான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.45 மணிமுதல் இரவு 9 மணிவரை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அன்று சுப்ரபாதம், மங்கள ஆரத்தி, ஸ்ரீனிவாசா கோவிந்த அபிஷேகம், பல்லக்கு உற்சவம், வைகுந்த துவாரா நிகழ்ச்சி, தா்ஷன ஆரத்தி, புஷ்பாஞ்சலி சேவை, லட்சாா்ச்சனை சேவை, கல்யாண உற்சவம், சயன பல்லக்கு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பரமபத நுழைவாயில் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
கரோனா தொற்றுப் பாதிப்பு பரவலாக உள்ளதால் இஸ்கான் கோயிலுக்குள் பக்தா்களுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜைகள் அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடைபெறவுள்ளது. சிறப்பு வழிபாடுகளை கோயிலின் இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.