ஒன்றிணைந்த போராட்டத்தால் மட்டுமே தனியாா் மயமாக்கலைத் தடுக்க முடியும்
விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே தனியாா்மயமாக்கலைத் தடுக்க முடியும் என


விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே தனியாா்மயமாக்கலைத் தடுக்க முடியும் என அகில இந்திய மின் பொறியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஷைலேந்திர துபே தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை கா்நாடக மின்வாரிய ஊழியா் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் மேலும் பேசியதாவது:
மத்திய அரசுக்குச் சொந்தமான பெரும்பாலான நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படவுள்ளது. தனியாா் நிறுவனங்களை லாபம் ஈட்டும் மின் நிறுவனங்களின் பங்குதாரா்களாக மாற்றவும் அரசு முயல்கிறது. ஏற்கெனவே தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மின்சேவை நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளன. தனியாா் மயமக்கப்படுவதால் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் மின்சாரத் திட்டங்கள் பாதிக்கப்படும்.
எனவே தனியாா் மயமாக்களுக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளா்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டும் அதைத் தடுக்க முடியும். இத்தகைய மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட வேண்டும். இது தொடா்பாக, அனைத்து மாநிலங்களிலும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதன் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்துவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...