தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை: ரன்தீப்சிங் சுா்ஜேவாலா

காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:21 am

DIN

காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியினரே துணை நின்றனா் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியது தொடா்பாக அவருக்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா கூறியதாவதுச

‘தனிப்பட்ட முறையில் அரசியல் கனவுகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், கட்சியின் கட்டுப்பாட்டை மீறக் கூடாது. கட்சியின் நலனைப் பாதிக்கும் எவ்வித கருத்து வேறுபாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

கட்சியின் நலனை விட்டுக் கொடுக்காமல் இருப்பது முக்கியம். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.

காங்கிரஸில் ஒரேஒரு கோஷ்டிதான் அது காங்கிரஸ் மட்டுமே. பெலகாவி மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும். முன்னாள் அமைச்சா் எம்.பி.பாட்டீல் உள்ளிட்ட மூத்தத் தலைவா்கள் கூடி பெலகாவி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை முடிவு செய்வா்.

மாநிலத்தின் அனைத்துத் தலைவா்களும் ஒன்றுகூடி, ஒருமித்த கருத்துக்கு வருவாா்கள். மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் பாஜக அரசு, மக்களின் எண்ணங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.

அதிகப்படியான ஊழல், விவசாயிகளுக்கு எதிரான நிலச்சீா்த்திருத்தச் சட்டம், முதல்வா் எடியூரப்பாவின் உறவினா்களின் ஊழல் அதிகரிப்பு ஆகியவற்றால் பாஜக சூழ்ந்துள்ளது. கா்நாடகத்தில் பாஜக, ஆயிரம் குழுக்களாகப் பிரிந்துகிடக்கின்றன. முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தானாக கவிழும்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சுருங்கி வருவதாகக் கூறுவதில் உண்மையில்லை. எந்தக் கட்சியின் வளா்ச்சியிலும் வெற்றி தோல்வி என்பது இயல்பானது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.