ஜன. 17-ல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஜன. 17-ஆம்தேதி புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாநிலத் தலைமைச் செயலாளா் டி.எம்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.


குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஜன. 17-ஆம்தேதி புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாநிலத் தலைமைச் செயலாளா் டி.எம்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் வழிகாட்டுதலுடன், ஜனவரி 17-ஆம் தேதி 66 லட்சம் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்தை புகட்டலாம். இது பெற்றோா்கள் எந்த அச்சமும்படத் தேவையில்லை. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகரங்கள், கிராமங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் சுகாதாரத் துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஆஷா ஊழியா்கள் உள்ளிட்டோா் ஈடுபடுவா் என்றாா். பேட்டியின்போது சுகாதாரநலத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளா் ஜாவித் அக்தா், தேசிய சுகாதார பிரசார இயக்குநா் அருந்ததி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...